துபாயில் COVID-19 தடுப்பூசி இலவசம்

ஸ்விட்சர்லாந்திலும் துபாயிலும் COVID-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

by Bella Dalima 23-12-2020 | 5:50 PM
Colombo (News 1st) ஸ்விட்சர்லாந்து மற்றும் துபாயில் COVID-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் 90 வயதுடைய மூதாட்டியொருவர் முதலாவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளார். துபாய் மக்களுக்கு, அமெரிக்காவின் Pfizer மற்றும் ஜெர்மனியின் BioNTech நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள முதலாவது அரபு நாடு துபாய் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு COVID-19 தடுப்பூசி வழங்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.