பல்கலை மாணவர்களின் அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு 

வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய மாணவர்களை இணைக்க இடைக்கால தடையுத்தரவு கோரிய மனுக்கள் நிராகரிப்பு 

by Staff Writer 23-12-2020 | 11:10 AM
Colombo (News 1st) பல்கலைக்கழகங்களின் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக, பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களுக்கு புதிதாக மாணவர்களை இணைத்துக் கொள்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2019 ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில், புதிய பாடத்திட்டங்களின் கீழ் தோற்றிய 42 மாணவர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. புவனேக அலுவிஹாரே, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் மூவரடங்கிய நீதியரசர் குழாத்தின் பெரும்பான்மையான நீதியசர்களின் தீர்மானத்திற்கு அமைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அதன் தலைவர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.  

ஏனைய செய்திகள்