நிவாரணப்பொதி சட்டமூலத்தை திருத்துமாறு வலியுறுத்தல்

கொரோனா நிவாரணப்பொதி சட்டமூலத்தை திருத்துமாறு ட்ரம்ப் வலியுறுத்தல் 

by Staff Writer 23-12-2020 | 11:24 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் நிவாரணப்பொதி சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு காங்கிரஸிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க பிரஜை ஒருவருக்கான நிவாரணக் கொடுப்பனவை 2,000 டொலராக அதிகரிக்குமாறு அவர் பரிந்துரைத்துள்ளார். வீணான மற்றும் தேவையற்ற விடயங்களை குறித்த சட்டமூலத்திலிருந்து நீக்குமாறு ஜனாதிபதி ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். ட்விட்டரில் பதிவிடப்பட்ட காணொளியொன்றினூடாக அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்தார். 900 பில்லியன் டொலர் பெறுமதியான இந்த சட்டமூலத்தில், அமெரிக்கர்கள் பெருமளவானோருக்கு 600 டொலர் நிவாரணநிதி வழங்கும் திட்டம் உள்ளடக்கப்பட்டிருந்தது.