மஹர கைதிகள் 7 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் கையளிப்பு

மஹர கைதிகள் 7 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2020 | 1:40 pm

Colombo (News 1st) மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த 07 கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வத்தளை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது.

சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரில் நால்வரின் அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, உயிரிழந்த கைதிகள் நால்வரின் சடலங்களை தகனம் செய்வதற்கு காலம் சென்றமையினால் ஏனைய 07 கைதிகளின் மரண பரிசோதனையை முன்னெடுக்க முடியாது போனதாக நிபுணர்குழு தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த தவணையின் போது மன்றுக்கு அறிவித்திருந்தது.

அதற்கமைய, 07 கைதிகளின் சடலங்கள் மீதான மரண பரசேதனையை முன்னெடுத்து, இன்றைய தினத்திற்குள் மன்றில் சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதவான் புத்திக்க சிரீ ராகல ஐவரடங்கிய நிபுணர் குழுவிற்கு உத்தரவிட்டார்.

கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்