ஜனாஸா தகனத்திற்கு எதிர்ப்பு: பொரளை மயானத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

ஜனாஸா தகனத்திற்கு எதிர்ப்பு: பொரளை மயானத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2020 | 7:05 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்யும் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொரளை மயானத்திற்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொரளை மயானத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய பெருந்திரளானவர்கள் COVID தொற்றினால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த கனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, ஜனாஸாக்களை தகனம் செய்யும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறை – அட்டாளைச்சேனையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கையில் வௌ்ளைத் துணி கட்டி மக்கள் தமது எதிர்ப்பினை வௌியிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்