சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டாம்: நுவரெலியா மாவட்ட செயலாளர்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டாம்: நுவரெலியா மாவட்ட செயலாளர்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டாம்: நுவரெலியா மாவட்ட செயலாளர்

எழுத்தாளர் Bella Dalima

23 Dec, 2020 | 4:18 pm

Colombo (News 1st) ஜனவரி மாதத்தில் சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் நுவரெலியா மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்புக் குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் COVID-19 தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்திற்குள் நுழைவோர் பொது சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்களைக் காண்பிக்க வேண்டும் என அதுகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான சான்றிதழ்கள் இருக்கும் பட்சத்தில் மாத்திரம் ஹோட்டல்களில் அல்லது ஏனைய இடங்களில் தங்க அனுமதி வழங்கப்படும் என நுவரெலியா மாவட்ட மேயர் சந்தன லால் கருணாரட்ன தெரிவித்தார்.

நுவரெலியாவிற்குள் நுழையும் நான்கு பகுதிகளில் உடல் வெப்பநிலை பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா மாவட்டத்தில் 9 அதி அபாய கொரோனா தொற்று வலயங்களும் 6 குறைந்த அபாயமுள்ள வலயங்களும் இருப்பதாக சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்