இதுவரை இறுக்குமதி செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்தொன்றை நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை

இதுவரை இறுக்குமதி செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்தொன்றை நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2020 | 7:29 pm

Colombo (News 1st) இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்தொன்றை நாட்டில் உற்பத்தி செய்வதற்கான புதிய உற்பத்தி நிலையமொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அரச ஔடத உற்பத்தி கூட்டுத்தாபன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில் Flucloxacillin என்ற நோய் எதிர்ப்பு மருந்து உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இதுவரை இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்காக வருடத்திற்கு 536 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டிய பொறுப்பும் அதற்கு போதுமான அறிவும் தமக்கு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஹம்பாந்தோட்டையிலும் மருந்து உற்பத்தி வலயம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்