நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

by Staff Writer 22-12-2020 | 7:20 AM
Colombo (News 1st) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது. குறித்த பகுதிகளுக்கு கிடைத்த மழைவீழ்ச்சி தொடர்பில் ஆராய்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பர பகுதிகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் எலஹெர பகுதிக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்