அமெரிக்காவில் 33 விநாடிகளுக்கு ஒரு கொரோனா மரணம்

அமெரிக்காவில் 33 விநாடிகளுக்கு ஒரு கொரோனா மரணம் பதிவு

by Bella Dalima 22-12-2020 | 6:05 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் 33 விநாடிகளுக்கு ஒரு கொரோனா மரணம் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்த கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 18,000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. வருட இறுதி விடுமுறையில் பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் அறிவித்தும், கடந்த வார இறுதி நாட்களில் 3.2 மில்லியன் பேர் அமெரிக்க விமான நிலையங்களுக்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனிடையே, தென்னாபிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று, பழையதைக் காட்டிலும் வீரியமிக்கது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவுடனான பயணங்களுக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன. இஸ்ரேல், துருக்கி, ஜெர்மனி, சவுதி அரேபியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தென்னாபிரிக்காவுடனான பயணங்களை இரத்து செய்துள்ளன. புதிய வகை கொரோனா தொற்றினால் தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் புதிய வகை வைரஸ் தொற்றைக் காட்டிலும், இந்த வைரஸ் வீரியமிக்கதென தென்னாபிரிக்க சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.