வியாழன், சனி கோள்கள் மிக நெருங்கிவரும் அரிய நிகழ்வை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு 

வியாழன், சனி கோள்கள் மிக நெருங்கிவரும் அரிய நிகழ்வை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு 

வியாழன், சனி கோள்கள் மிக நெருங்கிவரும் அரிய நிகழ்வை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு 

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2020 | 3:10 pm

Colombo (News 1st) சனி மற்றும் வியாழன் கோள்கள் இரண்டும் மிகவும் நெருங்கி வரும் அரிய நிகழ்வு இன்று (21) இடம்பெறவுள்ளது.

397 வருடங்களுக்கு பின்னர் இடம்பெறும் இந்த நிகழ்வை காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கும் கிட்டவுள்ளது.

இன்று மாலை 6.45 மணி முதல் இரவு 8.20 மணி வரை மேற்கு அடிவானத்தில் இந்த நிகழ்வை அவதானிக்க முடியும் என ஆர்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானி ஜனக அடஸ் சூரிய தெரிவித்துள்ளார்.

சனி மற்றும் வியாழன் கோள்கள் நெருங்கும் போது அவற்றுக்கிடையேயான தொலைவு 0.1 டிகிரி மாத்திரமே காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு கோள்களும் ஒரு டிகிரிக்கும் குறைவான தூரத்தில் வரும் போது, பார்வை கோணத்தில் ஒரே நேர்கோட்டில் இருப்பது போன்று தென்படும்.

இந்த அதிசய நிகழ்வை வெறுங் கண்களால் காண முடியும்.

வெறும் கண்களால் பார்க்கும் போது அவை பெரும் ஔிப்புள்ளிகளாக தென்படும்.

அத்துடன் தொலைநோக்கியூடாக பார்வையிடும் போது, இரு கோள்களும் ஒரே நேர் கோட்டில் இருப்பது போன்று தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்