ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரராக லூயிஸ் ஹமில்டன் தெரிவு 

ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரராக லூயிஸ் ஹமில்டன் தெரிவு 

ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரராக லூயிஸ் ஹமில்டன் தெரிவு 

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2020 | 2:22 pm

Colombo (News 1st) BBC வருடாந்த விருது வழங்கல் விழாவில் ஆண்டின் அதி சிறந்த விளையாட்டு வீரராக போர்மியூலாவன் (Formula 1) உலக சம்பியனான லூயிஸ் ஹமில்டன் (Lewis Hamilton) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

BBC இன் வருடாந்த விருது வழங்கல் விழா இங்கிலாந்தில் நடைபெற்றது.

வருடத்தின் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது ரசிகர்களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படுகிறது.

அதன்பிரகாரம் சர்வதேச அரங்கில் Formula 1 காரோட்டத்தில் பிரகாசித்த லூயிஸ் ஹமில்டன் அதி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை சுவீகரித்தார்.

Formula 1 காரோட்டத்தில் நடப்பு உலக சாம்பியனாக திகழும் லூயிஸ் ஹமில்டன் இதற்கு முன்னர் இந்த விருதுக்காக 04 தடவைகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

அதன்படி 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் லூயிஸ் ஹமில்டன் இந்த விருதை இரண்டாவது தடவையாகவும் சுவீகரித்துள்ளார்.

கடந்த வருடம் இந்த விருதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் வென்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்