Colombo (News 1st) கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் சில பகுதிகள் நாளை (21) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக COVID – 19 தொற்று ஒழிப்பிற்கான செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், பேலியகொடை பொலிஸ் பிரிவின் நெல்லிகஹவத்த மற்றும் பூரண கொட்டுவத்தை, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் ஶ்ரீ ஜயந்தி மாவத்தை ஆகிய பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளன.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தலானது மறு அறிவித்தல் முடக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
