by Staff Writer 20-12-2020 | 5:18 PM
Colombo (News 1st) நுவரெலியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஹோட்டல்களில் சமர்ப்பிப்பதற்காக அபாய வலயம் அல்லாத பகுதியிலிருந்து வருகை தருவதை உறுதிப்படுத்தும் சுகாதார வைத்திய அதிகாரியின் சான்றிதழ் அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க வேண்டாமென ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பீ. ரோஹண தெரிவித்துள்ளார்.