பொது போக்குவரத்து சேவையில் சிவில் உடைகளில் பொலிஸார்

பொது போக்குவரத்து சேவையில் சிவில் உடைகளில் பொலிஸார்

பொது போக்குவரத்து சேவையில் சிவில் உடைகளில் பொலிஸார்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2020 | 2:59 pm

Colombo (News 1sst) பொது போக்குவரத்து சேவைகளில் பொலிஸார் சிவில் உடைகளில் இன்று (20) முதல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல், சுகாதார வழிகாட்டல்களை மீறுவோரை அடையாளம் காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் வாகன விபத்துகளை தடுக்கும் நோக்கில் பொலிஸார் பொது போக்குவரத்துகளில் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, பண்டிகைக் காலம் நெருங்குவதால் கொண்டாட்டங்களை குடும்பத்தினருடன் மாத்திரம் மட்டுப்படுத்துமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
contac[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்