நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை நாளை முதல் மீள திறக்க தீர்மானம் 

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை நாளை முதல் மீள திறக்க தீர்மானம் 

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை நாளை முதல் மீள திறக்க தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2020 | 6:56 pm

Colombo (News 1st) நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை நாளை (21) திங்கட்கிழமை முதல் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் COVID – 19 தொற்றுக்குள்ளான ஆசிரியை ஒருவர் கடந்த 06 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து, பாடசாலையை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில், பாடசாலை சூழலுடன் தொடர்புடைய அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட PCR  பரிசோதனையில் கிடைத்த முடிவுகளின் பிரகாரம் பாடசாலையை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டதாக ஹட்டன் வலயக்கல்விப் பணிப்பாளர் பழனிமுத்து ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்