அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் – எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் 

அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் – எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் 

அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் – எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் 

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2020 | 1:59 pm

Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளை உடைத்தல், கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் தங்காபரணங்கள், பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வீதிகளில் பயணிக்கும் போது, கைப்பைகள் மற்றும் தங்காபரணங்கள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வீடுகளிலிருந்து வௌியேறும் சந்தர்ப்பங்களில் பெறுமதி மிக்க பொருட்களை வீடுகளிலேயே வைத்து விட்டு செல்வதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்