English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Dec, 2020 | 7:20 pm
Colombo (News 1st) LPL T20 கிரிக்கெட் தொடரில் சாம்பியனான Jaffna Stallions அணியில் இடம்பிடித்த வட மாகாண வீரர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இன்று உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
LPL T20 கிரிக்கெட் தொடரில் திசர பெரேரா தலைமையிலான Jaffna Stallions அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வட மாகாணத்தின் விஜயகாந்த் வியாஷ்காந்த், செபஸ்தியன்பிள்ளை விஜயராஜ், கனகரத்னம் கபில்ராஜ், தெய்வேந்திரம் டினோஷன் ஆகியோர் Jaffna Stallions குழாத்தில் இடம்பெற்றிருந்துடன் அவர்களில் விஜயகாந்த் வியாஷ்காந்த் லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடி பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து, யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வட மாகாண வீரர்களை வரவேற்கும் நிகழ்வை யாழ். துடுப்பாட்ட சமூகம் ஏற்பாடு செய்திருந்தது.
வடமாகாண கிரிக்கெட் வீரர்கள் கிளிநொச்சி – பளையிலிருந்து யாழ்ப்பாணம் – அரியாலை வரை வாகனப் பேரணியில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
அரியாலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
யாழ். மத்திய கல்லூரி ,யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர்களும் பயிற்றுநர்களும் யாழ். துடுப்பாட்ட சமூகத்தின் தலைவர் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
17 Jul, 2022 | 07:31 PM
25 Jan, 2022 | 04:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS