நாட்டை முற்றிலும் முடக்குகிறது இத்தாலி

பண்டிகைக் காலத்தில் நாட்டை முற்றிலும் முடக்குகிறது இத்தாலி

by Bella Dalima 19-12-2020 | 5:59 PM
Colombo (News 1st) நத்தார், புதுவருட பண்டிகைக் காலத்தில் நாடு தழுவிய முடக்கலுக்கு இத்தாலியில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பொது விடுமுறைக் காலங்களில், சிவப்பு வலயக் கட்டுப்பாடுகள் இத்தாலி முழுவதிலும் அமுல்படுத்தப்படவுள்ளன. அத்தியாவசிய தேவைகள் அல்லாத வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளன. தொழில், வைத்திய தேவைகள், அவசர காரணங்களுக்காக மாத்திரம் வீட்டை விட்டு வௌியேற பிரஜைகளுக்கு அனுமதியளிக்கப்படவுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் உறவினர் வீடுகளுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் சாதாரணமானதல்லவென இத்தாலியப் பிரதமர் Giuseppe Conte தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் ஐரோப்பாவில் மிக அதிகளவான உயிரிழப்புகள் சம்பவித்த நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. 67,894 மரணங்கள் அங்கு பதிவாகியுள்ளன.