நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை

நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவை; விசாரணைக்கு 15 வருடங்கள் தேவைப்படும்

by Staff Writer 18-12-2020 | 3:12 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேலும் 15 வருடங்கள் தேவைப்படுமென நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். வழக்குகளை விசாரணை செய்வதை துரிதப்படுத்துவதற்காக, நீதிமன்றங்கள் மற்றும் நீதவான்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, சிறைச்சாலைகளுக்குள் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக சுமார் 8000 கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை ஒரு வருட காலத்திற்கு புனர்வாழ்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நடைமுறைகளின் பிரகாரம், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வழக்கு விசாரணைகள் நிறைவுறும் வரையில் சிறையிலடைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.