தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திக்குமாறு அறிவிப்பு

by Staff Writer 18-12-2020 | 2:53 PM
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் காரணமாக வெற்றிடமாகியுள்ள உறுப்பினர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் அடிப்படையில், தற்போது காணப்படும் நடைமுறைகளுக்கமைவாக சுயாதீன குழுக்கள் உள்ளிட்டவற்றில் எவரேனும் ஒருவர் நீக்கப்பட்டால் அல்லது இராஜினாமா செய்தால் அந்த பதவி வெற்றிடத்திற்கு ஒருவரை நியமிப்பதில் சிக்கல் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆகவே, இத்தகைய குறைபாடுகளை விரைவில் நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்