பொலிஸாருக்கு எதிராக 2,400 முறைப்பாடுகள்

இவ்வருடத்தில் மாத்திரம் பொலிஸாருக்கு எதிராக 2,400 முறைப்பாடுகள்

by Staff Writer 18-12-2020 | 3:03 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக 2,400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 51 வீதமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்காமை மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பெருமளவிலான குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தில் தொடர்ந்தும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்வதற்காக திட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.