அமெரிக்க அரச நிறுவனங்களில் சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சைபர் தாக்குதல்

by Bella Dalima 18-12-2020 | 3:43 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை இலக்கு வைத்து பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிதி மற்றும் வர்த்தக திணைக்களங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா உள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இருப்பினும், குறித்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளது. சைபர் தாக்குதல் மோசமான அச்சுறுத்தலாகக் காணப்படுவதாக அமெரிக்காவின் சைபர் மற்றும் உள்ளக பாதுகாப்பு முகவர் நிலையம் மதிப்பீட்டறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. சைபர் தாக்குதல் மத்திய, மாநில, பிராந்திய அரசாங்கங்களுக்கு பெரும் ஆபத்தானது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.