மோட்டார் வாகன திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு தீடீர் இடமாற்றம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு தீடீர் இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2020 | 10:57 am

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் 600 ஊழியர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே தொடர்ந்தும் திணைக்கள பணியில் ஈடுபடுவார்கள் என ஆணையாளர் நாயகம் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்