காணி, நிதி பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் நியாயாதிக்க சபை

காணி, நிதி பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் நியாயாதிக்க சபை

காணி, நிதி பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் நியாயாதிக்க சபை

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2020 | 3:20 pm

Colombo (News 1st) காணி மற்றும் நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு விசேட நியாயாதிக்க சபையை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் , ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் நியாயாதிக்க சபையின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி மற்றும் நிதி தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைப்பதால் விசேட நியாயாதிக்க சபைகளை ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த விசேட நியாயாதிக்க சபை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

தற்போது மாதாந்தம் நான்கு தினங்களுக்கு மாத்திரம் நியாயாதிக்க சபை கூடுகிறது. அதனை 06 நாட்களாக அதிகரிக்க நீதி அமைச்சுடனான கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது காணி தொடர்பான விசேட நியாயாதிக்க சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், வருடமொன்றில் சுமார் ஒரு இலட்சம் முறைப்பாடுகள் கிடைப்பதாக நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

காணி மற்றும் நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு நியாயாதிக்க சபையில் தீர்வு காணப்படுவதால், நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்