English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
17 Dec, 2020 | 1:23 pm
Colombo (News 1st) லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரை வெற்றி கொண்ட Jaffna Stallions அணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நேற்றிரவு (16) நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Stallions அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்றது.
வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய Galle Gladiators அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களையே பெற முடிந்தது.
போட்டியில் 53 ஓட்டங்களால் வெற்றியீட்டிய Jaffna Stallions அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
போட்டியின் நாயகனாக சொய்ப் மலிக் தெரிவானார்.
தொடரின் நாயகன் விருது வனிந்து ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டது.
தொடரில் கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் மக்கள் சக்தியின் செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜ், யாழ். மாவட்ட வீரர்களான தெய்வேந்திரம் டினோஷன், கனகரத்தினம் கபில்ராஜ், விஜயகாந்த் வியாஷ்கான் ஆகியோரும் Jaffna Stallions குழாத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
COVID – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடரை முன்னெடுத்து வெற்றிகரமாக நிறைவு செய்த விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஷபக்ஸ, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
02 Mar, 2021 | 05:16 PM
02 Mar, 2021 | 11:06 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS