by Bella Dalima 17-12-2020 | 7:19 PM
Colombo (News 1st) வடக்கு மக்கள் ஒழுக்கத்துடனும் சுய கட்டுப்பாட்டுடனும் செயற்பட்டதால், முதலாவது கொரோனா அலை தாக்கத்தை கட்டுப்படுத்த முடிந்ததாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
வடக்கிலேயே முதலாவது கொரோனா அலை தாக்கம் செலுத்தியதாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, வடக்கு மக்களின் சுய கட்டுப்பாட்டாலும் முப்படையினர், பொலிஸாரின் ஒத்துழைப்பாலும் அதனைக் கட்டுப்படுத்த முடிந்ததாக சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பிரஜைகள் என்ற வகையில், தமிழ் மக்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு வழங்கி வரும் பங்களிப்பிற்காக ஜனாதிபதி, பிரதமர் சார்பில் அரசாங்கம் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
வடக்கில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளத்தை இராணுவத் தளபதி இன்று திறந்து வைத்தார்.