பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கு கொரோனா

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 17-12-2020 | 4:06 PM
Colombo (News 1st) பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கு Covid-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லமான Elysee Palace வௌியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக அவர் 7 நாட்களுக்கு தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளதாக Elysee Palace-இன் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரான்ஸ் பிரதமர் Jean Castex தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தொற்றுக்குள்ளான அதிபர் கடந்த புதன்கிழமை போர்ச்சுக்கல் பிரதமர் António Costa-வை சந்தித்துள்ளதுடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத் தலைவர் Peter Maurer-ஐயும் சந்தித்துள்ளார். பிரான்ஸில் நேற்றைய (16) நிலவரப்படி, 17,615 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 289 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொற்று ஆரம்பித்ததிலிருந்து 2.4 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 59,361பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.