ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா

ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா

ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2020 | 5:35 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கன் கேட்டரிங் (Sri Lankan Catering) சேவையின் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் பழகிய ஏனையவர்களுக்கும் PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் கேட்டரிங் சேவை நிறுவனம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 728 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, 26,353 பேர் இதுவரை நாட்டில் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, 34,737 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 8,925 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்