வௌிநாடுகளிலிருந்து மேலும் 100 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து மேலும் 100 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து மேலும் 100 பேர் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2020 | 10:57 am

Colombo (News 1st) கொரோனா தொற்றினால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் சிலர் இன்று (17) நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கத்தாரிலிருந்து 42 பேரும் ஓமானிலிருந்து 54 பேரும் மாலைதீவிலிருந்து நால்வரும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக COVID – 19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இதுவரை 8,012 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்