பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

17 Dec, 2020 | 4:06 pm

Colombo (News 1st) பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனுக்கு Covid-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை அதிபரின் உத்தியோகபூர்வ இல்லமான Elysee Palace வௌியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அவர் 7 நாட்களுக்கு தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளதாக Elysee Palace-இன் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரான்ஸ் பிரதமர் Jean Castex தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

தொற்றுக்குள்ளான அதிபர் கடந்த புதன்கிழமை போர்ச்சுக்கல் பிரதமர் António Costa-வை சந்தித்துள்ளதுடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத் தலைவர் Peter Maurer-ஐயும் சந்தித்துள்ளார்.

பிரான்ஸில் நேற்றைய (16) நிலவரப்படி, 17,615 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 289 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு தொற்று ஆரம்பித்ததிலிருந்து 2.4 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 59,361பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்