சீனாவின் Chang’e-5 விண்கலம் பூமிக்கு திரும்பியது

சீனாவின் Chang’e-5 விண்கலம் பூமிக்கு திரும்பியது

சீனாவின் Chang’e-5 விண்கலம் பூமிக்கு திரும்பியது

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2020 | 9:11 am

Colombo (News 1st) சீனாவின் Chang’e-5 விண்கலம் நிலவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பின்னர், சீனா நிலவிலிருந்து மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 40 ஆண்டுகளின் பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விண்கலம் கடந்த மாதம் 24 ஆம் திகதி விண்ணுக்கு ஏவப்பட்டது.

நிலவினை ஆய்வு செய்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்ட Chang’e-5  விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

எவ்வாறாயினும் எந்தளவு மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

2 முதல் 4 கிலோகிராம் எடையுடைய மாதிரிகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதற்கு முன்னர் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவினால் சுமார் 400 கிலோகிராம் மாதிரிகள் எடுத்து வரப்பட்டிருந்தன.

எனினும், அவை மிகவும் பழமை வாய்ந்தவையாக கருதப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்