கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் 

கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் 

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2020 | 1:36 pm

Colombo (News 1st) கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த COVID-19 தொற்றுக்குள்ளான தாயொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

குப்பியாவத்தை பகுதியை சேர்ந்த 29 வயதான தாயொருவருக்கே நான்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக டி சொய்சா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சாகரிக்கா கிரிவந்தெனிய குறிப்பிட்டார்.

இந்த தாயின் முதலாவது பிரசவம் இதுவெனவும், சிசேரியன் மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டதுடன், இவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் கூறினார்.

இரண்டு பெண் குழந்தைகளையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் அப்பெண் பிரசவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரசவ காலம் என்பதால், தேவையான பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாக டி சொய்சா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சாகரிக்கா கிரிவந்தெனிய தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்