கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்...

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் ; நேற்றைய தினம் 06 கொரோனா மரணங்கள் பதிவு

by Chandrasekaram Chandravadani 17-12-2020 | 8:59 AM
Colombo (News 1st) நாட்டில் நேற்று (16) முதல் இன்று (17) காலை வரையிலான காலப்பகுதிக்குள் 616 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் ஐவர் வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களாவர். எஞ்சிய 611 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 266 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 94 பேரும் நுவரெலியாவில் இருவரும் அம்பாறையில் 27 பேரும் கண்டி மாவட்டத்தில் 99 பேரும் இரத்தினபுரியில் 31 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 04 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் யாழ். மாவட்டத்தில் 11 பேரும் திருகோணமலையில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தின் பொரளையில் 65 பேர், மட்டக்குளியில் 62 பேர், கொம்பனித்தெரு பகுதியில் 17 பேர், கொள்ளுப்பிட்டியில் இருவர், வௌ்ளவத்தையில் 04 பேர், மருதானையில் 10 பேர், புளூமென்டல் பகுதியில் 08 பேர், கிரேண்ட்பாஸ் பகுதியில் 02 பேர், வெல்லம்பிட்டியில் 04 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் மஹர பகுதியில் 26 பேர், களனியில் 25 பேர், கொச்சிக்கடை பகுதியில் ஒருவர், நீர்கொழும்பில் 06 பேர், வத்தளையில் நால்வரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர். நேற்றைய தினம் (16) கொலன்னாவை, கொழும்பு - 09, பண்டாரகம, கொழும்பு - 14 மற்றும் கொழும்பு - 15 (இருவர்) உயிரிழந்ததை அடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்கள் 160 ஆக அதிகரித்துள்ளன. நாட்டில் இதுவரை 34,737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.