உள்நாட்டு இறைவரித் திணைக்கள செயற்பாடுகளை ஒன்லைன் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள செயற்பாடுகளை ஒன்லைன் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள செயற்பாடுகளை ஒன்லைன் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2020 | 3:35 pm

Colombo (News 1st) உள்நாட்டு இறைவரித் திணைக்கள தலைமை அலுவலகத்தின் நாளாந்த செயற்பாடுகளை ஒன்லைன் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமை அலுவலகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வரிப்பண அறிவீட்டிற்காக தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள இரண்டு அரச வங்கிகள் திறக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் H.M.W.C.பண்டார குறிப்பிட்டார்.

வரி செலுத்தப்பட்டமைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க விசேட கருமபீடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், பிராந்திய மற்றும் மாவட்ட அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமைபோல முன்னெடுக்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்