யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாக தோல்வி

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாக தோல்வி

எழுத்தாளர் Staff Writer

16 Dec, 2020 | 3:00 pm

Colombo (News 1st) யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் இன்று (16) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

45 உறுப்பினர்களைக் கொண்ட மாநகர சபையில் 21 பேர் ஆதரவாகவும் 24 பேர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

இந்த வாக்கெடுப்பு பகிரங்கமாக இடம்பெற்றிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த மூவரும் தமிழ் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் தலா ஓர் உறுப்பினரும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இலங்கை தமிழ் காங்கிரஸின் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்