26 ஆம் திகதி முதல் விமான நிலையம் மீள திறப்பு; நாளாந்தம் 500 சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

26 ஆம் திகதி முதல் விமான நிலையம் மீள திறப்பு; நாளாந்தம் 500 சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2020 | 9:39 pm

Colombo (News 1st) எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வரையறைகளுக்குட்பட்டு விமான நிலையத்தை மீள திறப்பதற்கு சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

விமான நிலையத்தை திறக்கின்ற அதே சந்தர்ப்பத்தில், நாளாந்தம் நாட்டிற்கு வருகை தருகின்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து சுற்றுலாப் பயணிகளும் PCR பரிசோதனைக்குட்படுத்தப்படுவதுடன், தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களில் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தருகின்ற அனைத்து சுற்றுலாப்பயணிகளும் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு இணங்க வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்