விமானப்படை பயிற்சி விமானம் PT6 விபத்திற்குள்ளானது

விமானப்படையின் பயிற்சி விமானம் PT 6 விபத்திற்குள்ளானது 

by Staff Writer 15-12-2020 | 2:22 PM
Colombo (News 1st) திருகோணமலை - சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த PT 6 பயிற்சி விமானம் விபத்திற்குள்ளாகியது. கந்தளாய் - சூரியபுர பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகியதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார். முன்னதாக குறித்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விபத்திற்குள்ளான விமானத்திலுள்ள விமானியை மீட்க மீட்புக்குழு மற்றும் மருத்துவக்குழாம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க குறிப்பிட்டார். பயிற்சி விமானியுடன் மாத்திரமே குறித்த விமானம் பயணித்துள்ளது.