Colombo (News 1st) உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.
மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கக் கூடும் என அதிகாரிகள் கூறியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
