English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
15 Dec, 2020 | 6:10 pm
Colombo (News 1st) திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த PT 6 பயிற்சி விமானம் விபத்திற்குள்ளாகியது.
அதில் பயணித்த பயிற்சி விமானி உயிரிழந்துள்ளார்.
விமானி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக இலங்கை விமானப் படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜயசிங்க குறிப்பிட்டார்.
கெடட் தர உத்தியோகஸ்தர் ஷலிந்த அமரகோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கேகாலை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவர்.
2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெடெட் அதிகாரியாக பயிற்சியை ஆரம்பித்த இவர், அந்த வருடம் ஜூலை மாதம் விமானிக்கான பயிற்சியை ஆரம்பித்திருந்தார்.
கந்தளாய் – சூரியபுர பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகியதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
முன்னதாக குறித்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் 1.05 அளவில் பயிற்சிக்காக விமானம் பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன், பிற்பகல் 1.15 அளவில் விமானம் தொடர்பை இழந்துள்ளது.
சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து 14 கடல்மைல் தொலைவில் விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் ஆராய விமானப்படை தளபதியினால் விசேட விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
02 Feb, 2021 | 04:59 PM
26 Jan, 2021 | 04:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS