உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

 உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

எழுத்தாளர் Bella Dalima

15 Dec, 2020 | 4:49 pm

Colombo (News 1st) உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.

மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கக் கூடும் என அதிகாரிகள் கூறியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்