25 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் தொகை பொலிஸாரிடம் சிக்கியது 

25 இலட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள் தொகை பொலிஸாரிடம் சிக்கியது 

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2020 | 1:56 pm

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 701 கிலோகிராம் மஞ்சள் கற்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கற்பிட்டி – கப்பலடி கடற்பிராந்தியத்தில் மிக சூட்சுமமாக, மணலுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

மஞ்சள் தொகை புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.

இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்