by Staff Writer 14-12-2020 | 6:01 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்றிரவு (13) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெடிப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.