மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 14-12-2020 | 9:55 PM

Colombo (News 1st) மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. 

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

பண்டாரகம பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரும் கொழும்பு - 14 பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.