ஜகத் அல்விஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

by Staff Writer 14-12-2020 | 3:23 PM
Colombo (News 1st) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இன்று (14) கடமைகளை பொறுப்பேற்றார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் முதலாவது செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.