'சக்தி FM Whatsapp அடையாளம்' போட்டியில் கிருஷ்ணகுமாரி வெற்றி 

by Staff Writer 14-12-2020 | 7:46 PM
Colombo (News 1st) 'சக்தி FM Whatsapp அடையாளம்' போட்டியின் வெற்றியாளராக நாவலப்பிட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமாரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்றினால் நாடு முடங்கியிருந்த காலப்பகுதியில் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 'சக்தி FM Whatsapp அடையாளம்' போட்டி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்கள் இடம்பெற்று வந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று (13) மாலை விசேட கலையகத்தில் நடைபெற்றது. இவர்களில் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட 6 போட்டியாளர்களில் வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டார். ஹட்டன் தினுஷிகா நாவலபிட்டி கிருஷ்ணகுமாரி வத்தளை தனுக்கா மட்டக்களப்பு பவானந்தன் கொழும்பு ரஹ்மான் பதுளை யாழினி ஆகியோர் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களில் வெற்றியாளராக நாவலப்பிட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமாரி தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தினை ஹட்டன் தினுஷிகாவும் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு பவானந்தனும் பெற்றுக்கொண்டனர்.