நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மலேசியா, தாய்லாந்து ஆதரவு 

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மலேசியா, தாய்லாந்து ஆதரவு 

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மலேசியா, தாய்லாந்து ஆதரவு 

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2020 | 4:34 pm

Colombo (News 1st) விவசாயத்துடன் தொடர்புடைய தொழில் துறைகளை மலேசியாவுடன் இணைந்து மேம்படுத்த இலங்கைக்கு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதாக இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் டென் யாங் தாய் தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கை உற்பத்திகளின் தாய்லாந்திற்கான ஏற்றுமதிகளை மேலும் விஸ்தரிப்பதில் அந்நாட்டில் அதிக கேள்வி நிலவுவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் சார்ட்சுவான் தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவுடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்