சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் தொகை சுங்க திணைக்களத்தின் வசமானது 

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் தொகை சுங்க திணைக்களத்தின் வசமானது 

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் தொகை சுங்க திணைக்களத்தின் வசமானது 

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2020 | 5:25 pm

Colombo (News 1st) சுங்க விசாரணைகளின் நிமித்தம் கைப்பற்றப்பட்ட கொள்கலனொன்றில் 25,000 கிலோகிராம் மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலனானது புறக்கோட்டையிலுள்ள வர்த்தகர் ஒருவரால் துபாயிலிருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட கொள்கலனில் ஒரு இலட்சம் கிலோகிராமுக்கும் அதிக தொகை பெரிய வெங்காயம் காணப்படுவதாக சுங்கத்திடம் தெரிவித்து அனுமதி பெற முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி 19 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு மஞ்சளை கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுங்கத்திற்கு சுமார் 26 இலட்சம் ரூபா வரிப்பணம் செலுத்த வேண்டுமென்ற நிலையில், குறித்த வியாபாரி 26,880 ரூபா மாத்திரமே செலுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்