PCR பரிசோதனையை துரிதப்படுத்தும் 10 உபகரணங்கள்

PCR பரிசோதனையை துரிதப்படுத்தும் 10 உபகரணங்கள்

by Staff Writer 13-12-2020 | 3:14 PM
Colombo (News 1st) PCR பரிசோதனைகளை துரிதப்படுத்தும் உபகரணங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் தொடர்பான அலுவலகத்திடம் இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக ஆரம்ப சுகாதார சேவைகள் மேம்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர், டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், PCR பரிசோதனைகளை துரிதப்படுத்தும் 10 உபகரணங்கள் எதிர்வரும் 2  மாதங்களுக்குள் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன. இந்த புதிய உபகரணங்கள் மூலம் மூன்றரை மணித்தியாலங்களில் PCR பரிசோதனை முடிவுகளை வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இதேவேளை, மேலும் 250,000 PCR உபகரணங்களை கொண்டு வருவதற்கான முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொக்டர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டுள்ளார். இதற்காக 360 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 250,000 PCR உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக 800 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுகாதார சேவைகள் மேம்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர், டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.