சனத் ஜயசூரியவின் தந்தை காலமானார்

சனத் ஜயசூரியவின் தந்தை காலமானார்

by Staff Writer 13-12-2020 | 9:57 PM
Colombo (News 1st) முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவின் தந்தையான டன்ஸ்டன் ஜயசூரிய இன்று (13) காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த டன்ஸ்டன் ஜயசூரிய தனது 80 ஆவது வயதில் காலமானார். பூதவுடல் மாத்தறையில் உள்ள அன்னாரின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவின் தந்தையான டன்ஸ்டன் ஜயசூரியவின் இறுதிக் கிரியைகள் நாளை (14) மாத்தறையில் நடைபெற்றது.