மேலும் சில பகுதிகளில் நாளை முதல் Lockdown

மேலும் சில பகுதிகளில் நாளை முதல் Lockdown

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2020 | 7:04 pm

Colombo (News 1st) நாட்டின் மேலும் சில பகுதிகளை நாளை (14) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது

அந்தவகையில், வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயூரா பிளேஸ் நாளை காலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, கம்பஹா மாவட்டத்தின் திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுகள், வாரண விகாரை வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தைக்குள் பிரவேசிக்கும் பகுதி, கெரவலப்பிட்டிய – நைதூவ, வெலிக்கடமுல்லை – தூவே வத்தை பகுதி என்பன நாளை அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச செயலகத்தின் வேகன்கல்ல கிழக்கு, மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகள் மற்றும் குடா ஹீனிட்டியன்கல கிராம சேவையாளர் பிரிவின் மரிக்கார் வீதி என்பனவும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதனிடையே, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்குமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்